தாய்லாந்தில் பாங் நெகா மாகாணத்தில் வசிக்கும் Nes (நேஷ்) என்ற 12 வயது பையன் ஒரு சமூக நட்சத்திரமாக மாறியுள்ளார். இண்டர்நெட்டில் மற்றும் ஆசியாவிலும் இச் சிறுவன் வெகுவாக பிரபலமடைந்துள்ளான்.
பெண்கள் போல் மாறுவேடமிட்டு இருப்பதே இச் சிறுவனின் பிரபலத்திற்கு பிரதான காரணமாகும்.
பெண்கள் ஆடைகள், உயர் குதிகால் சப்பாத்துக்கள், விக்குகள் மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றினால் Nes ஆல் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மிகவும் பிரபலமாகி உள்ளன. Instagram க்கு மட்டும் இவருக்கு 280,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர்.
Nes மிக இளம் வயதில் தனது தாயின் அழகுசாதன பொருட்ட்கள் மூலம் தனது பரிசோதனையினை செய்யத் தொடங்கினார். பெற்றோர்கள் இவற்றிற்கு தடங்கலாக இருக்கவில்லை, மாறாக, சிறந்த ஒப்பனை செவது எப்படி என்ற ஆலோசனைகளை கொடுத்து மகனை ஊக்கப்படுத்தினார்கள்.
NES விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து, அலங்கார ஒப்பனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற மாஸ்டர் வகுப்புகள் செய்து வருகின்றார். தாய்லாந்திலும் வெளிநாடுகளிலும் பல நிகழ்சிகளில் இவர் பங்குகொள்கின்றார்.
சிலர் சில சமயங்களில் நேசின் இந்த நடவடிக்கைகளில் பலர் சிரிக்கிறார்கள். அவர் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் அவன் விரும்புகிறதை அவன் செய்கிறான். அதே நேரத்தில், மாணவனாக இருந்துகொண்டே தனது பெற்றோருக்கு ஒரு புதிய வீட்டைக் கட்ட போதுமான அளவு நிதியினை தந்து சொந்த உழைப்பிலேயே சேகரித்துள்ளார்.
உடனுக்குடன் புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள எமது Facebook பக்கத்தினை லைக் பண்ணிக்கொள்ளுங்கள்