Ads Here

11/13/18

மணித்தியாலத்திற்கு 25,000 டாலர் அறவிடும் விமானம்


ஒரு சாதாரண போயிங் 787 விமானம் 240 முதல் 335 வரையான பயணிகளை சுமந்து செல்லக்கூடியது, ஆனால் இந்த போயிங் VVIP B787 Dream Jet விமானமானது 30 பயணிகளை மாத்திரமே செல்லக்கூடிய இருக்கையினை கொண்டுள்ளது. 





இது சாதரண விமானம் போன்று நாடுகளுக்கிடையே போக்குவரத்து செய்யும் விதமாக அமைக்கப்படவில்லை. மாறாக இந்த விமானம் ஒரு மணித்தியாலத்திற்கு 25,000 டாலருக்கு வாடகைக்கு விடப்படுகின்றது. இக் கணக்கின்படி, லண்டனில் இருந்து நியூயார்க் செல்வதற்கு சுமார் 206,000 டாலர்கள் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். என்ன ஒரு முட்டாள்தனம் என்று நினைக்க முடியாது, அதிஉயர் சொகுசு வாழ்க்கை வாழும் கோடிஸ்வரர்களுக்கு இது ஒரு விடயமே அல்ல.




இதன் உட்புறமானது ஒரு மாளிகையா? அல்லது விமானமா என்று மண்டையினை குழம்பிக் கொள்ளும் வகையில் காணப்படுகின்றது. மொத்தமாக 700 சதுர மீட்டர்களை கொண்ட இந்த விமானம் ஒரு மாநாட்டு அறை, எட்டு தனியாக படுக்கையறைகள், பல கழிவறைகள் மற்றும் ஒரு சாப்பாட்டு அறைகளை கொண்டுள்ளது


உலக தரம்வாய்ந்த பொருட்கள் மூலமே இதன் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமரிக்க ஜனாதிபதியின் விமானத்தினை விட இந்த விமானம் பல வசதிகளை கொண்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

15000 கிலோமீட்டர்  தூரம் அல்லது 17 மணிநேரம் தொடராக (ஒரே எரிபொருளில்) பயணிக்க கூடிய திறனை இந்த விமானம் கொண்டுள்ளது. உலகில் எந்த பக்கத்தில் இருந்தும் எந்த பாகத்திற்கும் இந்த விமானத்தினை ஒரு நபருக்கு வாடகைக்கு எடுக்க முடியும்.  அதிகமாக லண்டன்- பீஜிங், ஹாங்காங்-லாஸ்அன்ஜெல்ஸ் போன்ற இடங்களுக்கு இந்த விமானம் அதிகம் வாடகைக்கு எடுக்கப்படுகின்றது.





உடனுக்குடன் புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள எமது Facebook பக்கத்தினை லைக் பண்ணிக்கொள்ளுங்கள்