1960 மற்றும் 1970 களில், பல நாடுகள் போர்களில் இருந்து மீண்டு, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன உற்பத்தி முயற்சிகளில் களமிறங்கின. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அயல் நாடுகளின் முன் சொந்த நாட்டின் கௌரவத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், புதிய வேலைகளை வழங்கவும், மக்களுடைய வினைத்திறனை அதிகரிக்கவும், பொருளாதாரதிணை சீராக்கவும் இந்த துறையினை அதிக கவனம் செலுத்தியது
இந்தியாவின் பெங்களூரில் 1974 ஆம் ஆண்டு SAIL (அல்லது சன்ரைஸ் ஆட்டோமேடிக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்) நிறுவப்பட்டது. அடிப்படையில் எந்தவொரு புதிய அனுபவமும், சிறப்பு நிதியமும் காணப்படாமையினால், சில ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட வெளிநாட்டுக் காரைத் தளமாகக் கொண்டு ஒரு புதிய காரினை உற்பத்தி செய்ய முடிவு செய்தது.
SAIL Badal (சாய்ல் படால்) என்று அழைக்கப்படும் இந்த மூன்று சக்கர கார் 1982 வரை உற்பத்தி செய்யப்பட்டது. தற்போதும் இந்த வாகனத்தினை சில சாலைகளில் பார்க்கலாம். எப்படியோ இந்தியாவின் ஒரு இலட்சினையாக இந்த காரினை எப்போதும் நமக்கு பார்க்கலாம்.